Monday, 25 August 2014

முதல் 20 இணைய தளங்கள்


'தமிழ் கம்ப்யூட்டர் 1.0' புதிய அன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியீடு


தமிழ் கம்ப்யூட்டர் பக்கங்களை இனி ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வழியாக பார்க்கலாம்..

இயங்கு தளம்:
ஆன்ட்ராய்டு 2.2 மற்றும் அதற்கு மேல்

பதிப்பு
1.0

அளவு
1.8MB

இணைய இணைப்பு: தேவை

லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilcomputer.tamilapp

திரை கீ போர்ட்( On-Screen Keyboard )


எப்பொழுதாவது உங்கள் கீ போர்டை உடனடியாக உபயோகிக்க முடியாமல் போனால் வின்டோஸ்ல் உள்ளமைந்துள்ள(inbuilt) திரை  கீ போர்டை( On-Screen Keyboard ) மவுஸ் வழியாக உபயோகிக்கலாம்..அதனை கொண்டு வர வழிமுறைகள் இங்கே..ரன் மெனுவில் 'osk' என டைப் செய்து என்ட்டரை(enter) தட்டவும்..உடனே மவுஸ் வழி இயங்கும் கீ போர்டானது தோன்றும்..இதை உபயோகித்து டைப் செய்து கொள்ளலாம்.

Thursday, 7 August 2014

அமெரிக்க அமேசானும் இப்போது கைபேசி தயாரிக்கிறது

amazonmobile கைபேசி வியாபாரத்தில் கடும் போட்டியிடும் SONY, SAMSUNG, APPLE, NOKIA, LGபோன்ற  நிறுவனங்களுக்கு  இடையில் AMAZONன் 3D தொழில்நுட்பம் கொண்ட புதிய கைபேசியை இன்று சந்தையில் அறிமுகம் செய்து விற்பனை செய்ய AT&T முன்வந்துள்ளது.

amazon3d

“விடுமுறை காலத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இந்தக் கைபேசி சந்தையில் கிடைக்கும் ” என்கிறது THEWALLSTREET JOURNALலின் அறிக்கை. ஆனால் இதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை, அமேசான் மற்றும் AT&Tநிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் இதுபற்றி தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்த கைபேசி 3Dகண்ணாடி இல்லாமலேயே ஒரு 3Dதிரையை போன்று செயல்படுகிறது. WALL STREET JOURNALஅறிக்கை படி இந்த கைபேசியில் உள்ள நான்கு முன் பக்க கேமராக்கள் நமது கண்திரையை கண்காணித்து இந்த 3D EFFECTஐ சாத்தியப்படுத்துகிறது.  இம்மாத துவகத்தில் AMAZON ஜூன் 18 ஒரு விசேஷ நிகழ்வு இருப்பதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது,அதற்கான விடை தான் இந்த மூக்கு கண்ணாடி இல்லாத 3Dஸ்மார்ட் கைபேசி….