Saturday, 19 December 2015

புகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்



இணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.

கீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் window-வில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse செய்து உங்கள் கணினியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.பின் Convert Now என்பதை click செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.இந்த தளம் விண்டோஸ் 7 -ற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.இணைய தள முகவரி - 

அடாப்டின் உதவியுடன் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற சொந்த தகவல்களை மறைக்கலாம் :

addappt-on-phones-and-Watch



பிடிக்காத அல்லது  வேண்டாத   ஒரு நபரின் தொடர்பிலிருந்து  விலகி இருக்க அவர்களது  எண்ணை   பிளாக் லிஸ்ட்டில் போடுவது என்பது  அனைவரும்  அறிந்ததே !    அதுபோலவே நமது சொந்த மொபைல் போனில் ஒருவருக்கு தகவல் அனுப்பும்போது,  நம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை மற்றவர்கள் பார்ப்பதை நாம் விரும்புவதில்லை.அதற்காகவே  தனி மனித சுய பாதுகாப்பு கருதியே அடாப்ட்டின் உதவி கொண்டு பிறருக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற  தகவல்களை மட்டும் மறைத்து அனுப்பலாம்.
அடாப்ட்:
அடாப்டின் மூலம் நீங்கள் தனியார்  (பிரைவேட் ) என்று மார்க் செய்யும் அனைத்து தகவல்களையும் மற்றவர்கள் பார்க்காதபடி செய்யலாம். இதில் கூடுதலாக  உள்ள ஆட்டோ சின்க்ரனைசிங் நுட்பத்தால் நாம் எந்த ஒரு புது சாதனத்தினை  வாங்கினாலும்  பழைய சாதனத்திலுள்ள அனைத்து  தொடர்புகளையும்  எளிதில் மாற்றிக் கொடுக்க கூடியது. மேலும் நீங்கள்  விரும்பாத உறவுகளுடன் பேச விருப்பமில்லாத நிலையில் அவர்களை பிளாக் செய்யவும், மேலும்  உங்கள் சமந்தப்பட்ட எந்த தகவலையும் அவர்களுக்கு அனுப்பாத வண்ணமும் செய்யப்படுகிறது. உதாரணமாக  ஒரு உள்ளடக்கத்தில்   உங்கள் பிறந்த நாளை மட்டும் யாரும் பார்க்காமல் செய்ய வேண்டும் என்று நினைத்தால்   அதனை மட்டும் மறைத்து விட்டு மற்ற செய்திகளை பயனர்களுக்கு காட்டும்.     இதனால்  தனி மனித  சுதந்திரத்திற்கு எந்த வித பாதிப்புமின்றி  பயனர்கள்   தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.
உதாரணமாக    நாம் புதிதாக மாற்றிய  வீட்டு முகவரியை  நண்பருக்கு அனுப்பும்போது அவர்களின் சாதனத்தை மூன்றாமவர்  ஒருவர் பார்க்கும்போது அதனை எளிதில் எடுத்து தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது. அதனால் இது போன்ற பிரச்சனைகளுக்காகவே   அடாப்ட் ஒரு நல்ல வழியினை  உருவாக்கித் தந்துள்ளது.

Tuesday, 1 December 2015

வை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :

 

ledlight



லை-பை  தொழில்நுட்பம் முதலில்  2011 ல்  எடின்பர்க் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால்  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு  கிடைக்கும் இணையத்தின்  வேகமானது நாம் இன்று பயன்படுத்தும்  வை-பையின்  வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாக  உள்ளதை அறிவியல் அறிஞர்கள்  ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துள்ளனர். இதனால்  நொடிக்கு 224GB   வேகத்தினைக் கொடுக்கக் கூடியது. லை-பை அல்லது லைட் பிடிலிட்டி என்று சொல்லப்படுகின்ற ஒளி  விசுவாசத்தினைக் கொண்டு  கண் இமைப்பதற்குள்  18 திரைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய  அளவிற்கு பன்மடங்கு  அதிவேகமானது. தற்போது இதனை உலகில் சில இடங்களில் சோதனை முன்னோட்டம் பார்ப்பதற்காக  உலவ  விட்டுள்ளனர். 
FI2ypg9
இதில் முக்கியமான  விஷயம் என்னவென்றால் லை-பையில் பரப்பப்படும் ஒளி அலைகள்  வை-பையின் ரேடியோ அலைகளை  விட 10,000 மடங்கு அதிக வேகமானது .இதிலிருந்து லை-பைக்கு  கூடுதல் செயல்  திறன்  உள்ளது தெரிய வருகிறது.லை-பை யை அனைத்து அலுவலகங்களிலும் வீட்டிலும்  பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அதிவேக  திறன் கொண்ட  லை-பையினை  இன்னும் நான்கு அல்லது  ஐந்து வருடங்களில்    அறிமுகபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அனைத்து அமைப்புகளையும்  LED பல்புகளைக்  கொண்டே செயல்படுத்த உள்ளனர்.   லை-பையை  வரும்காலத்தில்  வீட்டு உபகரண சாதனங்களிலும்  பயன்படுத்த வாய்ப்புள்ளது.ஏனெனில் ஒரு பக்கம் வீட்டின்  வெளிச்சத்திற்கு உதவும் LED பல்புகளும்  மறுபக்கம் மற்றொரு அறையிலே  தரவுகளின் மூலம் இணையத்தை அணுகிக் கொண்டும் இருக்கலாம்..

WHATSAPP SMILES MEANING