Monday, 8 September 2014

விண்டோஸ் 7, 8, 8.1 ரெக்கவரி டிரைவ்

இப்போதெல்லாம் கம்ப்யூட்டரை வாங்கும் போது விண்டோஸ் இன்ஸ்டால் சிடி(CD) டிவிடிகளை(DVD) கொடுப்பதில்லை.உங்கள் கணினி பூட் செய்ய மறுத்துவிட்டால் உங்களுக்கு தேவை பூட்டபில் ரெக்கவரி டிரைவ்(Bootable Recovery Drive ). ஆதனை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.

விண்டோஸ் 7 ல் USB பூட் ரெக்கவரி டிரைவ் கொடுக்கப்படவில்லை.அதற்குபதில் சிடி அல்லது டிவிடி கொண்டு நீங்கள் பூட்டபில் ரெக்கவரி டிரைவ்(bootable recovery drive) உருவாக்கலாம். Windows Key + R அழுத்தி recdisc.exe என கொடுக்கவும். என்டர்( enter ) அழுத்தி பின்வரும் விண்டோவில் கொடுக்கப்பட்டிருக்கும் சிடி(CD) அல்லது டிவிடி(DVD) டிரைவை தேர்வு செய்து பூட்டபில் ரெக்கவரி டிரைவ் உருவாக்கவும்.



விண்டோஸ் பூட் ஆப்சனில்(boot option) டிவிடி அல்லது சிடி என கொடுத்து பூட் செய்யதால் நீஙகள் உங்கள் டேட்டாவை ரெக்கவர் செய்து விடலாம். விண்டோஸ் 8ல் இதுபோன்று உபயோகிக்கவும். விண்டோஸ் 8.1 ல் USB மூலம் நீங்கள் ரெக்கவரி டிரைவ் உருவாக்கி கொள்ளலாம். விண்டோஸ் 8.1 ல் மட்டும் இந்த வசதி உள்ளது.

No comments:

Post a Comment