Wednesday, 30 April 2014

Samsung launches Galaxy K Zoom with 20MP camera


Samsung launches Galaxy K Zoom with 20MP camera

The device, a successor to Galaxy Camera 2, combines the features of a smartphone with a full-featured point and shoot camera.

SINGAPORE: Samsung on Tuesday launched Galaxy K Zoom at an event in Singapore. The device, a successor to Galaxy Camera 2, combines the features of a smartphone with a full-featured point and shoot camera.

K Zoom uses components similar to those in the high-end Galaxy phones and is powered by Android KitKat. The big difference, however, between the phones and the K Zoom is the imaging hardware. K Zoom uses a point-and-shoot size image sensor that can click photos in 20.7 megapixels. The design is also different. K Zoom weighs 200 grams and has a thickness of 20mm.

The device will be available in the different markets worldwide, including India, in the coming months, but for now there are no specific details on the India launch date or price.

"With the introduction of the Galaxy K Zoom, Samsung continues to demonstrate our commitment to creating products that meet the diverse demands of our consumers," said Sun Hong Lim, senior vice president of Mobile Communications Business at Samsung Electronics. "The new Galaxy K Zoom (provides) all-in-one mobile experience."

The K Zoom offers 10X zoom and has a xenon flash. In terms of focal length, the lens in K Zoom covers 24-240mm. The lens has an aperture of F3.1-6.3. The device also has a 2MP front camera.

K Zoom uses an image sensor based on BSI (backside illuminated) technology and optical image stabilization, which is likely to help users click better images in low light.

In terms of software features, the device has almost all the features that high-end Galaxy cameras have, including support for cellular connectivity and ability to run almost all Android apps. In terms of photography related features, two stand out: Pro Suggest Mode, which should help users apply filters in a better way; and Selfie Alarm for helping users take better selfies.

K Zoom has a 4.8-inch SuperAMOLED screen with 1280x720p resolution. It is powered by a six-core (1.3GHz quad-core and 1.7GHz dual-core) processor and 2GB RAM. There is 8GB internal storage but using a SD card a user can add up to 64GB more. The device has a 2,430mAh battery.

Samsung, which is not as strong as Sony or Canon in the camera market in terms of market share, is trying to compete by using Android and smartphone combination to make cameras smarter. The company launched Galaxy Camera in 2012 and followed it with Galaxy Camera 2 in 2013.

The idea has been to connect to consumers who like the ease of a smartphone camera and yet want picture quality that is possible only through good full-size camera hardware.

While so far Samsung has got the smart part right in its Galaxy cameras, it is yet to get the picture quality part right. The image quality offered by earlier Galaxy cameras has been good but not exceptional. Also, the price — especially the launch price — of Galaxy cameras has been on the higher side, keeping consumers away from them.

eBay reports first quarter loss on tax bill

 NEW YORK: eBay recorded a loss in the first-quarter due to a hefty tax charge on foreign earnings, but revenue jumped in part because of its thriving PayPal payments business.

Adjusted results beat expectations but the company offered weak second-quarter guidance and shares fell 4.5% in aftermarket trading.

The results come as PayPal, which eBay bought for $1.3 billion in late 2002, gained 5.8 million new active registered accounts to end the quarter up 16% to 148 million.

The business is now growing faster than the company's core e-commerce site: Payments revenue rose 19% to $1.85 billion, about 43% of total revenue. Meanwhile, its core marketplaces revenue rose 10% to $2.16 billion.

The business also was the subject of an acrimonious tussle between eBay and billionaire activist investor Carl Icahn earlier this month. Icahn, who owns about 2% of eBay's shares, said repeatedly that the company should spin off all or part of PayPal. But eBay has said the company is better as a whole.

Icahn ultimately said that he would drop the PayPal strategy and withdraw his proposal to put two nominees on the board. In return, eBay will make David Dorman, chairman of CVS Caremark Corp and founding partner of Centerview Capital Technology, the 10th independent director on the 12-member board. But Icahn said he still believes eBay should spin off PayPal and said in a statement that he'll seek confidential talks with the company.

"Our company is better together for now," said CEO John Donahoe. "eBay and PayPal are both great businesses, and they support and reinforce each other."

Overall, eBay lost $2.33 billion, or $1.82 per share, in the three months that ended March 31. That compares with net income of $677 million, or 51 cents per share, last year. Excluding a $3 billion tax charge, net income totaled 70 cents per share. Analysts expected net income of 67 cents per share.

The tax charge relates to freeing up about $6 billion in available cash in the US to increase "financial flexibility."

That could indicate eBay is considering a big acquisition, although the company made it clear there was no specific announcement yet.

"We are not announcing any large U.S.-based acquisition, nor are we committing to finance our share buyback with offshore cash," said CFO Robert Swan. "What we are doing is ensuring we have the capital available for U.S. needs."

Revenue rose 14% to $4.26 billion from $3.75 billion. Analysts expected $4.23 billion.

For the second quarter, the company expects adjusted net income of 67 cents to 69 cents per share on revenue of $4.325 billion to $4.425 billion. Analysts expect net income of 70 cents per share on revenue of $4.4 billion. A higher tax rate, higher proxy fees related to the dispute with Icahn, and lower revenue from its ticket-selling marketplace StubHub that is related to a fee structure change all are expected to affect results, Donohoe said.

EBay reaffirmed its full year guidance. It expects adjusted net income of $2.95 to $3 on revenue of $18 billion to $18.5 billion. Analysts expected net income of $2.99 per share on revenue of $18.25 billion.

Shares fell $2.44, or 4.5 percent, to $52.10 in aftermarket trading. They ended the day up 90 cents at $54.54. The stock is down less than 1 percent since the beginning of the year.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு

 தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்  நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு  போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு தேர்வு வைத்து பணி  நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை. 
எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர்  ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம்  என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, இனிமேல் கம்ப்யூட்டர்  ஆசிரியர்களை அரசு பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு  அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக 1,000  கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்  தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்போதும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி  தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் சில வித  ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடஒதுக்கீடு  அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அதுபோல புதிதாக  கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,000 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு  அடிப்படையில் பணி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு  தேர்தல் முடிந்த பின்னர் வர உள்ளது.இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு கல்லூரிகளில் விரைவில் உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 
தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரி களில் உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை) என 2 வகையாக இருக்கின்றன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். 
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டதாரியாக இருந்தால் நெட், ஸ்லெட் தேர்ச்சி தேவையில்லை. இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 600 விரிவுரை யாளர் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர் பணியிடங் களும் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான காலியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 
இதற்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.42 ஆயிரம் கிடைக்கும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தர ஊதியம் (கிரேடு பே) ரூ.600 அதிகம் என்பதால் அவர்கள், விரிவுரையாளர்களை காட்டிலும் கூடுதலாக ரூ.1000 சம்பளம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 28 April 2014

உலகப் புகழ்பெற்ற கடல்...பாலம்... கடவுள்!

 

       உலகப் புகழ்பெற்ற இடங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து ஆண்டு முழுவதும் ராமேஸ்வரத்துக்கு மக்கள் வந்துகொண்டே  இருக்கிறார்கள். நீண்ட பிரகாரம் கொண்ட ராமநாதஸ்வாமி திருக்கோயிலும் தீர்த்தங்களும் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு ஏற்றவை. பாம்பன் தீவில்  அமைந்திருக்கும் ராமேஸ்வரம் இயற்கையின் கொடை. கடலுக்குள் அமைந்திருக்கும் மிக நீண்ட பாலத்தில் பயணிப்பதும் நின்று ரசிப்பதும் அற்புதமான  அனுபவம். கப்பல் வரும்போது இரண்டாகப் பிரியும் ரயில் பாலம் அதிசயம். கண்ணாடி படகில் கடலுக்குள் பயணம் செய்வதை மறந்துவிடாதீர்கள்.  மீன்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு இந்தப் படகில் மட்டுமே கிடைக்கும்.

எப்போது செல்வது?


ஆண்டு முழுவதும் செல்லலாம்.

எப்படிச் செல்வது?


ரயில், பேருந்து.

எங்கே தங்குவது?


ராமேஸ்வரத்தில் நல்ல தங்கும் விடுதிகளும் சுவையான உணவுகளும் கிடைக்கின்றன.

அருகில் உள்ள இடங்கள்?

கந்தமதன பர்வதம், கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், சேதுக்கரை...

என்ன வாங்கலாம்?


சிப்பிகளில் செய்த பொருட்கள் பிரபலம்.

Wednesday, 23 April 2014

நூற்றாண்டை கடந்த ஏற்காடு சாலையின் வரலாறு



‘மலை முகடுகளை தொட்டுச் செல்லும் மேகங்கள், அந்த மேகங்களை தொட்டணைத்து நிற்கும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும் வகிடுகளாய் வளைவுகள், இதயம் வருடும் இனிய காற்று’ இத்தனையும் கடந்து சென்றால் பரந்து விரிந்த ஏரி, பசுமை போர்த்திய ரோஜாத்தோட்டம், பக்கவாட்டில் அருவிகள்’  என்று காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து மனதை நிறைவடையச் செய்யும் இயற்கையின் அதிசயம் தான் ‘ஏழைகளின் ஊட்டியான’  ஏற்காடு.  திருமணி முத்தாறு, வசிஷ்ட நதி  போன்ற புனிதங்களின் பிறப்பிடமான ஏற்காடு மலையில் பாதை அமைக்கப்பட்டு நூறாண்டு கடந்து விட்டது. நூற்றாண்டு மகிழ்வைக் கொண்டாடும் இத் தருணத்தில்  அதன் தொன்மையான வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்ப்போம்.

சேலம் மாவட்டம் பாண்டிய, பல்லவ, சோழ மற்றும் ஹொய்சால ராஜ்ஜியத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 14 வது நூற்றாண்டில் மாலிக்காப்பூராஸ் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டம் நிர்வகிக்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின் சேலம் கோட்டையினை ஹைதர் அலி கைப்பற்றினார். பின் திப்புசுல்தானின் தோல்விக்குப் பிறகு 1772ம் ஆண்டில் சேலம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே 1792ல் நடந்த போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாராமஹால் மற்றும் சேலம் மாவட்டம் 1792ல் உருவாக்கப்பட்டது.
1801ல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

பின்னர் 1808ல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட கலெக்டராக இருந்த போது சேலம் மாவட்டம் உருவாயிற்று. 1820 முதல் 1829ம் ஆண்டு வரை சேலத்தில் கலெக்டராக இருந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் காக்பர்ன் ஏற்காட்டின் தந்தையாக பாவிக்கப்படுகிறார். ஏற்காடு மலைத்தொடர் முதன் முதலாக கண் டறியப்படுவதற்கு முன்னாள் இருளடைந்த காடுகளாக இருந்தது.  இவரது காலத்தில் தான் சேர்வராயன் மலைப்பகுதியில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பயிரிடப்பட்டது. சேர்வராயன் மலைக்கு பின்னரே தமிழகத்தின் நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களுக்கும் காபி பயிரிடுவது விரிவடைந்தது.  முதன் முதலில் 1827ல் சேர்வராயன் மலைப்பகுதியில் சர்வே மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது சேர்வராயன் மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 19ம் நூற்றாண்டுகளில் யானைகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் இல்லை. இதனிடையில் 1836ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த பிஷர் என்பவர் சேலம் ஜமீன்தாரின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கினார். அவரைத் தொடர்ந்து சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்கள் உள்ளடக்கிய நிலங்களை பெரிய பணக்கார முதலாளிகள் வாங்க முன்வந்தனர். பாண்டிச்சேரியில் இருந்து வந்த சில பிரஞ்சுக்காரர்களும், கிறிஸ்தவர்களும் இதில் அடக்கம். இவர்களுடன் ஏற்காடு பகுதியில் குடியேறிய கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையினர் ஆவர்.

Friday, 11 April 2014

கோவை மாவட்டத்துக்கு வயது 208

        தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி கால்வைப்பதற்கு முன்பாக மைசூரை ஆண்ட திப்புவின் ஆட்சியின் கீழ் அன்றைய கோவை பகுதிகள் இருந்தன. சென்னை வழியாக வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் காலூன்ற தொடங்கினர். 1792ல் கோவை மற்றும் சேலத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

அப்போதைய கொங்கு மண்டல பகுதியில் நிலங்களை கம்பெனி அதிகாரத்திற்கு கொண்டு வந்து வகைப்படுத்தி நிலவரி நிர்ணயம் செய்தனர். அப்போது ஆட்சியாளர்களாக இருந்த தாமஸ் மன்ரோ ரயத்து வரி முறையை அறிமுகப்படுத்தினார். இந்த வரி தான் கம்பெனியின் கருவூலத்தை நிரப்பியது. தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் கம்பெனி கருவூலத்தை நிரப்புவதில் கோவையின் நில வரி வருவாய் முக்கிய பங்காற்றியது.

பின்னர் 1799ல் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கோவை பகுதிகள் ஆங்கிலேய மகாராணியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. கொங்கு நாட்டில் ஆட்சியை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர்கள் அப்போதைய பரந்து விரிந்த கோவை பகுதியை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்தனர். முதலில் கோவை மாவட்டத்தின் தலைநகராக தாராபுரம் சிறிது காலமும், பவானி சிறிது காலமும் இருந்துள்ளது. கோவையை தலைநகராக கொண்டு 1804ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்னர் தான் வேகமான வளர்ச்சியும் தொடங்கியது. 208வது பிறந்த நாளில் கோவை மாவட்டம் இன்று அடியெடுத்து வைக்கிறது. ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் கோவை மாவட்டம் பல பிரிவுகளாக பிரிந்து சென்றது. 1868 வரை கோவை மாவட்டத்தின் ஆளுகையில் தான் நீலகிரி மாவட்டம் இருந்தது. அப்போது எச்.எஸ் கிரேம் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் நீலகிரியை தனி மாவட்டமாக ஏற்படுத்தினார்.

நீலகிரி பிரிந்த பின்னரும் அன்றைய கோவை மாவட்டத்தின் எல்லை தற்போது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லேஹாலம் வரையிலும், கிழக்கில் கரூர் வரையிலும் பரவியிருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் மொழி வாரி மாநிலங்கள் ஏற்படுத்தப்பட்டபோது கொல்லேஹால் பகுதி கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின் 1979ல் ஈரோடு மாவட்டமும், 2009ல் திருப்பூர் மாவட்டமும் ஏற்படுத்தப்பட்டது. 

Saturday, 5 April 2014

அத்திமரத்தின் மருத்துவ குணங்கள்

 One of the best trees, fig trees and cherished thing. Hinduism, the Navagraha planet Venus in the line of fig trees


மிகச்சிறந்த மரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் மரங்களில் அத்திமரமும் ஓன்று. இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில் சுக்கிர கிரகத்தின்  மரமாக அத்திமரம் வணங்கப்படுகிறது. அத்திமரங்களில் பல வகைகள் உண்டு. அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என மூன்று வகை மரங்கள்  உண்டு. அத்திமரம் அனைத்து வகையிலும் மருத்துவகுணம் உடையது. அத்திபழத்தை அப்படியே சாப்பிடமுடியாது.

பழத்துக்குள் சிறுசிறு பூச்சிகள் இருக்கும். இதனால் பழத்தை பதப்படுத்தி சாப்பிடவேண்டும். மரத்தின் வேர் பட்டை, இலை, பாலகாய், பழம் என  அனைத்துமே மனிதன் நலமாக வாழ்வதற்கு தேவையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அத்தி இலை பித்த நோய்களை குணப்படுத்தும்.  இந்த இலைகளைத் தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் பித்த நோய் தொடர்பான அனைத்தும் குணமாகும். வாய்புண், ஈறுகளில் சீழ்வடிதல்,  உடலில் ரத்தம், வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு நோய் குறையும். அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

அத்தி பழம், அத்தி பிஞ்சு, அத்திக்காய், ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் மூலம், ரத்த மூலம், வயிற்று கடுப்பு,  சீதபேதி, வெள்ளை படுதல்,  வாதநோய்கள், மூட்டு வலி சர்க்கரை நோய் தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்தும் அத்திக்காய் சாற்றை குடித்தால் சிறுநீரகக்கோளாறுகள்  நீங்கும். அத்தி மரத்தின் வேரில் இருந்து எடுக்கக்கூடிய 'கள்' சர்க்கரை மற்றும் மூலநோய்களை கட்டுப்படுத்தும்.

மரத்தின் இலையை இரவில் ஊறவைத்து காலையில் குடிநீரில் கலந்து குடித்தால் வாதநோய், மூட்டுவலி குணமாகும். மனிதர்களை நலமுடன்  வாழவைக்கும் அத்தி மரம் இந்து கோயில்களில் தலவிருட்சமாக இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் அதவம்(அத்தி  மரம்) என்று அழைக்கப்படுகிறது.

Wednesday, 2 April 2014

அல்சரை விரட்டும் அமுத பானம் இளநீர்

Brought health, vitality brought tirumular enappatinar. Living a life of food, and clothes to wear, it is necessary to live and location



உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண  உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும்  அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும். நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன  யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான். 

பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை நேரங்களில் உணவை அவசர  அவசரமாகவும், வெந்தும் வேகாமலும், சுவையோ அல்லது சுகாதாரத்தைப்பற்றியோ யோசிக்காமல் அரைகுறை வயிற்றுடன் சாப்பிட்டுவிட்டு  அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்வோரை நாம் காண்கிறோம். அதேபோல் மதிய நேரத்திலோ அல்லது இரவிலோ சரியான நேரத்திற்கு போதிய  அளவு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. 

காரணம் அவர்கள் உணவுக்கு பதிலாக அடிக்கடி டீ, காபி, நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது ஒரு காரணமாக அமைந்து  விடுகிறது. இது நாளடைவில் பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. இதன் விளைவு வயிற்றுப்புண் ஏற்பட்டு அல்சரில் கொண்டு  சேர்க்கிறது. அல்சர் நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படும் பாதிப்பு. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்டநேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான  திண்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது. அல்சர்  இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சு  எரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் ஏற்படும்.

 வயிற்று புண் இருப்பவர்கள் சாக்லெட், குளிர்பானங்கள், மது, பெப்பர்மிட், காபி, கருப்பு தேனீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள்,  காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக கோதுமை, கோழி, மீன், பீன்ஸ்,  முட்டை, தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவற்றை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் புளிப்பான பழங்கள்  மற்றும் காரமான உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். 

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிட தொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் காற்றுப்புகாத பைகளில்  கட்டிவைத்தால் அவை அழுகிவிடும். எனவே அவற்றை உயிருள்ள உணவு என்கிறோம். அந்த உயிர்சத்துதான் நம் உடலில் உண்டாகும் அல்சர்  போன்ற பிரச்னைகளை தடுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. அல்சரை போக்கும் சக்தி தேங்காய்க்கும் உண்டு. 

தேங்காயில் உள்ள நீர், இளங்காயாக இருக்கும்போது அதில் இருக்கும் மெல்லிய வழுவழுப்பான பொருள் நம் உடலில் உண்டாகும் நோயை தடுக்கும்  இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை தணிக்கும்,  கண்கள் குளிர்ச்சி பெறும், பட்டினி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜீரணமாகவும், அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குவதில் இளநீர்முக்கிய பங்கு  வகிக்கிறது.

இளநீரை தினமும் மதியநேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீரை  வெளியேற்றுவதுடன், ரத்த சோகையை போக்குகிறது. எனவே நோயற்ற வாழ்க்கைக்கு உகந்த உணவை சரியான முறையில் சரியான அளவு  சாப்பிட்டால் அல்சர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை காரமான மற்றும் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை  குறைத்துக்கொண்டால் அல்சருக்கு எளிதில் ‘குட்-பை சொல்லலாம்.