உலகப் புகழ்பெற்ற இடங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து ஆண்டு முழுவதும் ராமேஸ்வரத்துக்கு மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நீண்ட பிரகாரம் கொண்ட ராமநாதஸ்வாமி திருக்கோயிலும் தீர்த்தங்களும் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு ஏற்றவை. பாம்பன் தீவில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் இயற்கையின் கொடை. கடலுக்குள் அமைந்திருக்கும் மிக நீண்ட பாலத்தில் பயணிப்பதும் நின்று ரசிப்பதும் அற்புதமான அனுபவம். கப்பல் வரும்போது இரண்டாகப் பிரியும் ரயில் பாலம் அதிசயம். கண்ணாடி படகில் கடலுக்குள் பயணம் செய்வதை மறந்துவிடாதீர்கள். மீன்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு இந்தப் படகில் மட்டுமே கிடைக்கும்.
எப்போது செல்வது?
ஆண்டு முழுவதும் செல்லலாம்.
எப்படிச் செல்வது?
ரயில், பேருந்து.
எங்கே தங்குவது?
ராமேஸ்வரத்தில் நல்ல தங்கும் விடுதிகளும் சுவையான உணவுகளும் கிடைக்கின்றன.
அருகில் உள்ள இடங்கள்?
கந்தமதன பர்வதம், கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், சேதுக்கரை...
என்ன வாங்கலாம்?
சிப்பிகளில் செய்த பொருட்கள் பிரபலம்.
No comments:
Post a Comment