Friday, 7 November 2014

மனிதனின் மரணத்திற்கு பிறகும் சுற்றி நடப்பவை நினைவில் இருக்கும் : ஆய்வில் தகவல்


ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த  சவுத்தாம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகளிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவக்குழு இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள 15 மருத்துவமனைகளில் உள்ள 2060 நோயாளிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டது.
இதில், ஒரு மனிதனின் இதய துடிப்பு நின்ற 20 முதல் 30 விநாடிகளில் அவனின் மூளையும் செயல்பாட்டை இழந்து விடும் எனவும், அதன் பிறகு 3 நிமிடங்கள் வரை அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்த நினைவுகள் அவனுக்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியிடம் நினைவுகள் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதில், அவர் உயிரிழந்த பிறகு அவரை உயிர்பிழைக்க வைப்பதற்காக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி அந்த நோயாளியின் நினைவுகள் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.   மரணம் தொடர்பான ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு இந்த ஆய்வு எடுத்து செல்லும் என தெரிகிறது.

ஏழில் (7-ல்) அடங்கிய வாழ்க்கை தத்துவம்



நன்மை தரும் ஏழு

1)
ஏழ்மையிலும் நேர்மை
2)
கோபத்திலும் பொறுமை
3)
தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4)
வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5)
துன்பத்திலும் துணிவு
6)
செல்வத்திலும் எளிமை
7)
பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு...

1) சிந்தித்து பேசவேண்டும்
2)
உண்மையே பேசவேண்டும்
3)
அன்பாக பேசவேண்டும்.
4)
மெதுவாக பேசவேண்டும்
5)
சமயம் அறிந்து பேசவேண்டும்
6)
இனிமையாக பேசவேண்டும்
7)
பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு...

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2)
பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3)
பிறருக்கு உதவுங்கள்
4)
யாரையும் வெறுக்காதீர்கள்
5)
சுறுசுறுப்பாக இருங்கள்
6)
தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
7)
மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு...

1) கவனி உன் வார்த்தைகளை
2)
கவனி உன் செயல்களை
3)
கவனி உன் எண்ணங்களை
4)
கவனி உன் நடத்தையை
5)
கவனி உன் இதயத்தை
6)
கவனி உன் முதுகை
7)
கவனி உன் வாழ்க்கையை

Saturday, 1 November 2014

‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்… தவிர்ப்பது எப்படி?


மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!
என்னென்ன ஆபத்துகள்?
தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்… அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் ‘வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.
எப்படித் தவிர்க்கலாம்?
பிரச்னைகளைத் தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளாக்’ (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்… போயே போச்!
தெரிந்தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.
ஆபத்துதவி ஆப்ஸ்!
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதி லிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ‘நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொண்டால், ‘ஆபத்துதவி’யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.
பின்குறிப்பு:  
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.zayaninfotech.security

பிலிப் காட்லர்



#‘மார்க்கெட்டிங் துறையின் தந்தைஎன்று அழைக்கப்படுபவர் பிலிப் காட்லர். இப்போது கெல்லாக்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் சர்வதேச மார்க்கெட்ங் துறையின் பேராசியராக இருக்கிறார்.
#சிகாகோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. முடித்தவர். சர்வதேச அளவில் 12 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.
#மார்க்கெட்டிங் துறையில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களும், பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். மார்க்கெட்டிங் சம்பந்தமாக இவர் எழுதிய புத்தகத்தைதான் உலகம் முழுக்க நிர்வாகம் படிக்கும் மாணவர்கள் படிக்கிறார்கள்.
#ஹனிவெல், ஜி.இ., ஐ.பி.எம். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஃபோர்டு, மோட்டரோலா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். மேலும் சில அரசு நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார்.
#உலகம் முழுக்க இருக்கும் பிஸினஸ் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்.
#இவருடைய 75-வது பிறந்த நாளுக்கு இந்தோனேஷிய அரசாங்கம் தபால்தலை வெளியிட்டு க் கௌரவித்திருக்கிறது.

#‘கம்பெனிக்கு குறைந்த தலைவர்களும், தானாக முடிவெடுக்கும் மேனேஜர்களும் தான் தேவைஉள்ளிட்ட இவருடைய பல கருத்துகள் மிகவும் பிரபலம்.
நன்றி : தமிழ்.ஹிந்து நாளிதழ்

Linked In வலைத்தளம் மீது வழக்கு

link2
கலிபோர்னியா மாகனத்தின் மவுண்ட்டன் வியு என்ற இடத்தில் Linked in நிறுவனம் அமைந்துள்ளது. சமூக வலைப்பின்னல் சேவைகளின் வளர்ந்து வரும் இந்நிறுவனம் கடந்த மார்ச் இறுதியில் 300 மில்லியன் ​​பயனர்களை ​கவர்ந்துள்ளது, மேலும் 3 பில்லியன் ​​பயனர்களை ​கவர்வது இலக்கு என்று தெரிவித்தது.
linkedin1
இப்படி மாபெரும் வளர்ச்சி காணும் நிறுவனத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு:
வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி தகவல்களை பரிமாறியதாக LinkedIn மீது உரிமை கோரிக்கை வழக்கு தொடர்ந்தார் அமெரிக்காவின் கூட்டாச்சி நீதிபதி….
“வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மின் ​மின்னஞ்சல்களில் இருந்து
எடுத்து தங்கள் வியாபார விளம்பரத்திற்கு பயன்படுதியிருக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார் மாவட்ட நீதிபதி LUCY KOH…
ஒருமுறை LinkedIn தங்கள் CONTACTSகளுக்கு விண்ணப்பம் அனுப்ப சம்மதித்தாலும், அதை ஏற்காதபட்சத்தில் மீண்டும் மீண்டும் விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது. இது அனுப்புநர் மீதான அபிப்பிராயத்தை கெடுக்கும் என்பதும் ஒரு குற்றச்சாட்டு…
link2
மேலும் நீதிபதி LUCY கூறுகையில், வாடிக்கையாளர்கள் LinkedIn தங்களின் “RIGHTS OF PUBLICITY” மீறியதால்​
இந்த நிறுவனத்தின்
வணிக விளம்பரத்திற்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை பயன்படுத்தக்கூடாது, இது மேலும் கலிபோர்னியாவின் “UNFAIR COMPETITION LAW” வையும் மீறியிருக்கிறது….
ஆனாலும் KOH, LINKEDIN மீது சாட்டப்பட்ட தொலைபேசி ஒட்டு கேட்டல் ​வழக்கை
தள்ளுபடி செய்தார்..
கடந்த அக்டோபர் மாதம் ஒரு சர்ச்சை:
“NE W INTRO APP” என்ற APPLICATION தயாரித்தது Linked In, இது வாடிக்கையளார்களின் மின் அஞ்சல் தகவல்களை கைப்பற்றி அவர்கள் தொடர்புகொள்ளும் நபர்களின் பெயரில் PROFILE உருவாக்கியது.. இது பெரும் சர்ச்சை ஏற்ப்படுதியதால் இந்த APPLICATION மூடப்பட்டது….
இவ்வாறு திருட்டுத்தனம் செய்வதாலோ என்னமோ குறைந்த நாட்களில் அதிக வாடிக்கையாளர்களை பெரும் இலக்கை அமைத்துள்ளது….

வெப்சைட் - டுடோரியல்ஸ் பாய்ண்ட்



பேருக்கேற்றாற்போல் இந்த வெப்சைட்ல் என்னற்ற புரோகிராமிங்கிற்கு டுடோரியல்( Tutorial ) உள்ளது. படிக்க எளிமையாகவும் விரிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. JAVA, HTML5, JAVA, C, C++ ,PHP ,Perl ,Ruby ,Android ,iOS ,Phython போன்றவை படிப்பதற்கு ஏற்ற தளம். மாணவர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

லிங்க்:
http://www.tutorialspoint.com

பிக்ஸ் இட்


உங்கள் கம்ப்யூட்டரில் எதேனும் புரோகிராம் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் செய்யும் போது பிரச்சனை உள்ளதா? அதாவது விண்டோஸ் ரிஜிஸ்ரியில்(registry) பிரச்சனை இருந்தாலோ அல்லது பாதிப்படைந்து இருந்தாலோ உங்களால் குறிப்பிட்ட புரோகிராமினை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அன்-இன்ஸ்டால்( Install/Uninstall ) செய்யவோ முடியாது. இதற்காகவே மைக்ரோசாப்ட்  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'பிக்ஸ் இட்' ( Fix It ) என்னும் மென்பொருளை. வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் எற்படும் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் பிரச்கனைகளை தீர்க்கலாம்.

லிங்க்:
http://support.microsoft.com/mats/program_install_and_uninstall/en

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?

altநீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
 கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும் 
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம் 
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும் 
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் 
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும் alt




 













3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும்