Tuesday, 15 September 2015

Image result for motivational wallpapers

நீங்கள் ஒரு இசைக் கலைஞரா? YouTubeஇன் புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.

screen-shot-2015-03-16-at-1-57-48-pm

நம் நாட்டில் குடி, கிரிகெட் தவிர்த்து இளையோர்க்கு வேறு எந்த பொழுது போக்கும் இல்லை. வெளி நாடுகளில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கலையைக் கற்பதையும் தொடர்ந்து பயிற்சி செய்வதையும் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பர். கல்லூரிகளில் பாடுவதும் மதிப்பெண் தரும் ஒரு பாடமாகவே இருக்கும். அனால் அதில் அனைவரும் தொழில்முறைக் கலைஞராக வருவதில்லை.
இவ்வாறு இசை ஆர்வத்தில் இருக்கும் புதிய இசைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அதிக மக்களைச் சென்றடைய கலைஞர்களுக்கான Youtube (Youtube for Artists) எனும் பெயரில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
  • எப்படி புதிய ரசிகர்களைப் பெறுவது
  • எப்படி பிரபலமாகுவது
  • எப்படி தங்களின் இசையின் மூலம் பணம் சம்பாரிப்பது
  • தங்களின் புதிய நிகழ்சிகளை விளம்பரப்படுத்துவது
  • கூட்டு முயற்சியில் மக்களிடம் இருந்து பணம் பெற்று புதிய ஆல்பம் இசைப்பது
போன்ற வசதிகளை இசைக் கலைஞர்களுக்கான வசதிகளை அளிக்கிறது Youtube. நீங்கள் ஒரு பாடகராகவோ, புதிய இசை அமைப்பாளராக இருந்து இணையம் வழியாக மக்களைச் சென்றடைய விரும்பினால், அவசியம் இந்த புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Wednesday, 9 September 2015

கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது!

183182003

நமது அன்றாட இணைய பணிகளில் தேடுபொறிகளின் பங்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும் கூகல் எவ்வாறு படங்களை தேடுகிறது, ஒரு பட கோப்பை எப்படி வார்த்தைகளால் விளக்குகிறது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
நீங்கள் ஒரு மன்னர் ஒருவரின் படத்தை பார்த்தால் உங்களுக்கு என்னென்ன தோன்றும்?
1. ஒரு ஆண்
2. ஒருவர்
3. நின்றுகொண்டு இருக்கிறார்
4. அரசர்
அதே போல்., ஒரு ராணியின் படம் என்றால்.,
1. ஒரு பெண்
2. ..
3. ..
Google caption
என  அவர் மன்னர் என்பதை தாண்டி அந்த படத்தின் பொது காரணிகள் “ஒரு ஆண்” என்பது அனைத்து மொழிகளிலும்  ஆண் என்பது தான்.
இது போல ஒவ்வொரு படத்தில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் உள்ள பொது பெயர்களை கணிதத்தில் வெக்டார் (Vector Space Maths) (திசை வெளி/கோட்டுக் கணிதம்) கோட்டில் வரிசையாக அடுக்கி.,  எந்தெந்த சொற்கள் இந்த சொல்லுக்கு அடுத்து அதிகமாக வருகிறது என்பதையும் தொடர்புபடுத்தி, ஒரு படத்தை வார்த்தைகளால் விளக்கும் முறையை கடந்த ஆண்டுகளில் படிப்படியாக கூகல் தேடுபொறியில் பொறியாளர்கள் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
Translation அதாவது மொழியாக்கம் / மொழிபெயர்த்தல் செய்வது என்பது  ஒவ்வொரு சொல்லாக ஒரு மொழியில் இருந்து அடுத்த மொழிக்கு மாற்றி., பின்னர் வாக்கியம் அமைத்தல் என படிப்படியாக செறிவடையும் ஒரு செயல்முறை.
அனால்., கூகள் தேடுபொறி இப்பொது ஒரு பட கோப்பில் என்ன உள்ளது என்பதை ஆங்கிலத்திலும், தமிழிலும் இன்ன பிற மொழிகளிலும் எழுதி விளக்கும் வண்ணம் வளர்ந்துள்ளது.  இதன் திறனை மதிப்பீடு செய்ததில்  சிறந்த மனிதன் 69 மதிப்பெண் பெற்றால் இது 59 மதிப்பெண் பெறுகிறது. விரைவில் மனிதனின் திறனை விட அதிகமாகும் வாய்ப்புள்ளது. ​
IBM நிறுவனத்தின் வாட்சன் எனும் கணினி இப்படிதான் பல திறன்களுடன் உருவாக்கப்பட்டது. இபொழுது வாட்சனின் திறனை வைத்து பலரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பல மென்பொருள்களை சமூக நலனுக்காகவும், நிறுவனமாகவும் உருவாக்கி வருகின்றனர். ஒரே ஒரு வாட்சன் செர்வர் அனைத்தையும் செய்யும்.
கூகள் என்னதான் திறனாக இருந்தாலும் அதன் இறுதி பயன் வெறும் விளம்பரம் காட்டுதல் என முடங்கி விடும். ஏற்கனவே உலகின் பல திறமைசாலிகள் வேலை வெட்டி இல்லாமல் முடங்கி இருக்கும் இடமாக கூகல் அலுவலகங்கள் உள்ளன. 85% கூகல் ஊழியர்களுக்கு சவாலான வேலை எதுவும் இல்லை. அதிக பட்சம் Youtube Comments Moderation செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த வேலை பார்ப்பவர் அண்ணா பலகலைகழகத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றவராக இருப்பார்.