
நம் நாட்டில் குடி,
கிரிகெட் தவிர்த்து இளையோர்க்கு வேறு எந்த பொழுது போக்கும் இல்லை.
வெளி நாடுகளில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கலையைக் கற்பதையும் தொடர்ந்து பயிற்சி செய்வதையும் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பர்.
கல்லூரிகளில் பாடுவதும் மதிப்பெண் தரும் ஒரு பாடமாகவே இருக்கும்.
அனால் அதில் அனைவரும் தொழில்முறைக் கலைஞராக வருவதில்லை.
இவ்வாறு இசை ஆர்வத்தில் இருக்கும் புதிய இசைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அதிக மக்களைச் சென்றடைய கலைஞர்களுக்கான Youtube (Youtube for Artists)
எனும் பெயரில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
- எப்படி புதிய ரசிகர்களைப் பெறுவது
- எப்படி பிரபலமாகுவது
- எப்படி தங்களின் இசையின் மூலம் பணம் சம்பாரிப்பது
- தங்களின் புதிய நிகழ்சிகளை விளம்பரப்படுத்துவது
- கூட்டு முயற்சியில் மக்களிடம் இருந்து பணம் பெற்று புதிய ஆல்பம் இசைப்பது
போன்ற வசதிகளை இசைக் கலைஞர்களுக்கான வசதிகளை அளிக்கிறது Youtube.
நீங்கள் ஒரு பாடகராகவோ,
புதிய இசை அமைப்பாளராக இருந்து இணையம் வழியாக மக்களைச் சென்றடைய விரும்பினால்,
அவசியம் இந்த புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment