Thursday, 30 April 2015

இரண்டு புளிப்பான ஆப்பிள் செய்திகள்

apple0309event-090

pebble-watch
Pebble Watch (Not an iWatch)

  1. -வாட்ச் எனும் புதிய கை கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள். ஐ போனில் உள்ள அனேக வசதிகளையும் கொண்ட இந்த வாட்ச் சுமார் 40 வித மாடல்களில் வெளிவந்துள்ளது. நீங்கள் விரும்பினால் தங்க வாட்ச் செய்தும் தர இருக்கிறது ஆப்பிள்.
பிரச்னை என்னவென்றால் இதன் சிறப்பம்சங்கள் ஐ போன் இருந்தால் மட்டுமே வேலை செய்யும். இதன் விலையோ மிக அதிகமாக உள்ளது (வழக்கம் போல).
Pebble எனும் நிறுவனம் அருமையான ஸ்மார்ட் கை கடிகாரங்களை அறிமுகம் செய்து அமெரிக்காவில் வெற்றியடைந்தது. அதைப் பார்த்து தற்போது அதிக விலையில் குறைந்த வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள்.
  1. USB-C எனும் புதியரக USB Portஐ தான் புதிதாக அறிமுகம் செய்துள்ள mac air மடிக்கணினியில் பொருத்தியுள்ளது அப்பிள். அதுவும் ஒரே ஒரு போர்ட் மட்டுமே இந்த மடிக்கணினியில் இருக்கும். பொதுவாக பேட்டரியை சார்ஜ் செய்ய தனியாக ஒரு power port இருக்கும். ஆனால் இந்த USB-C வகை port மற்ற போர்ட்களைப் போல் செவ்வகமாக இல்லாமல் நீள் வட்டம் போல இருக்கும்., இதனால் ஏற்கனவே உள்ள எந்தவொரு USB சாதனத்தையும் நாம் பயன்படுத்த முடியாது. மடிக்கணினி சார்ஜ் செய்யும் போது இருக்கும் ஒரே ஒரு USB-C போர்ட் பயன்பாட்டில் இருக்கும் உங்களால் உங்கள் ஐ போனைக் கூட இந்த மடிக்கணினியில் சொருக இயலாது.
    635615529607417612-yCM-hwvH6CyMWbDP1Gixh21nAnikiYrGwyhOD-HPBsw
ஆப்பிளில் வேலை செய்யும் R&D ஊழியர்களுக்கு என்னாச்சு என தீவிர ஆப்பிள் விசிறிகளே இணையத்தில் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment