Wednesday, 29 April 2015

பூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது கூகுல்!​

project_look_launch
பூமி  முழுவதும் இணைப்பை ஏற்படுத்த ​எவ்வளவு பலூன் தேவை?​
​இந்த பூமி முழுவதும் தொடர்பை ஏற்படுத்த 2000 பலூன்கள் சீரான இடைவெளியில் பறக்கவிடச் செய்ய வேண்டும்.

nevadatestlaunch
project_look_launch
Google Punchar Kadai for Project Loon

ஒரு பலூன் எவ்வளவு நாள் பறக்கும்?
இதுவரை சோதனை செய்ததில் 100 முதல் 130 நாட்கள் வரை பலூன்கள் பிரச்னை இல்லாமல் பறந்துள்ளது.

இதனால் விமானங்களுக்கு பிரச்னை இல்லையா?
இந்த பலூன்கள் விமானங்களும், ஓசோனும் இருப்பதற்கு மேல் stratosphere – ஸ்ட்ராடோஸ்பியர் எனும் வளி மண்டல அடுக்கில் பறக்க விடப்படும். இதனால் விமானங்களால் எந்த விபத்தும் ஏற்படாது. எரிகல், ராக்கெட் தாக்காது எனவும் சொல்லபடுகிறது.

stratosphere_diagram

செயலிழந்த பலூன்கள் என்னவாகும்?
அவற்றை முறையாக ஒரு குறிப்பிட்ட இடத்தில விழ வைத்து மீண்டும் எரிபொருள் நிரப்பி மேல் அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இதற்க்கான காத்து அடிக்கும் புதிய கூகுல் பஞ்சர் கடைகள் பூமி முழுவதும் திறக்கப்பட உள்ளது.
தங்களால் நாள் ஒன்றுக்கு சுமார் 20 பலூன்களை அனுப்ப முடியும் என கூகள் சொல்லியுள்ளது.

atmosphere_layers

எல்லாம் இணைய தொடர்புக்குத் தானா?
​ அதுதான் முக்கிய காரணம்., இனி உலக நாடுகளை பல புதிய விதத்தில் இணைக்க, உளவு பார்க்க, கட்டுபடுத்த, மறைமுகமாக இது உதவலாம். ஒவ்வொரு நாட்டின் மீதும் இது பறக்க அனுமதி வாங்க வேண்டுமா, இணைய இணைப்பு கட்டணங்கள் வசூலிப்பது என பல நடைமுறை பிரச்சனைகள் உள்ளது.

யாருக்கெல்லாம் பயன்படும் இது?
தீவுகள், மலைகள், தூர கிராமங்கள் என இணைய இணைப்பு சாத்தியம் இல்லாதவர்களுக்கு, கடலில் போகும் கப்பல்கள், விமானத்தினுள் பயணம் செய்பவர்கள் என அனைவரும் இணைய இணைப்பில் இருக்க பயன் தரும். அப்பபோ நான் “அம்மா இணையம் ” வாங்க வேணாம்னு நினைக்குறேன்.  

No comments:

Post a Comment